45 வயது வரை விளையாடுவேன்-தெண்டுல்கர்

Home  >> Entertainment  >> cricket News  >> 45 வயது வரை விளையாடுவேன்-தெண்டுல்கர்

   (2012-07-28 00:00:00)

மும்பை:கிரிக்கெட்டில் யாரும் எளிதில் எட்ட முடியாதபடி சாதனை மேல் சாதனை படைத்திருப்பவர் தெண்டுல்கர். தற்போது தெண்டுல்கருக்கு 39 வயதாகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவார் என்று தகவல்கள் வெளியானது.

தெண்டுல்கர் அந்த தகவல்களை மறுத்தார். இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில் மும்பையில் நேற்று பிஎம்டபிள்யூ புதிய ரக கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட தெண்டுல்கர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எதில் ஈடுபடுவீர்கள் என்று கேட்கப்பட்டது.

தெண்டுல்கர் அதற்கு பதில் அளிக்கையில், இப்போது என் முழு கவனமும் கிரிக்கெட்டில்தான் உள்ளது. 5 அல்லது 6 ஆண்டுகளுக் குப்பிறகு என்ன செய்வது, என்ன செய்வேன் என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றார். இதன்மூலம் 45 வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை தெண்டுல்கர் சூசகமாக உணர்த்தியுள்ளார். எனவே தெண்டுல்கர் இப்போதைக்கு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

தெண்டுல்கருக்கு சிறுவயதில் இருந்தே கார் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதிக்க தொடங்கியதும் முதலில் மாருதி 800 கார் வாங்கினார். இன்று அவரிடம் உலகின் முக்கிய நிறுவனங்களின் சொகுசு கார்கள் இருக்கின்றனர். எனவே தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு கார் தொடர்பான தொழிலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.