3 மின்வழித்தடங்கள் செயலிழப்பு-மின்சாரம் இன்றி 20 மாநிலங்கள் தவிப்பு

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> 3 மின்வழித்தடங்கள் செயலிழப்பு-மின்சாரம் இன்றி 20 மாநிலங்கள் தவிப்பு

   (2012-07-31 00:00:00)

புதுடெல்லி:இந்தியாவில் மின்வழித்தடங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு மண்டல வழித்தடங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டல வழித்தடம் தனியாக உள்ளது. இந்த 5 மின்வழித்தடங்களும் அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் இயங்கி வருகின்றன. மொத்தம் 95 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை இந்த உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.

வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மண்டல மத்திய மின்தொகுப்பிற்கு செல்லும் மின்வழித்தடம் இன்று முற்றிலும் செயலிழந்தன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின்வழித்தடங்கள் செயலற்றதால், தலைநகர் டெல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கின.

இதனால் டெல்லி மெட்ரோ ரெயில் சேவை, ரெயில்வே சேவை, போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்கள் அலுவலக நேரம் முடியும் முன்னரே வீடுகளுக்குத் திரும்பலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.