அக்னி -1 ஏவுகணை சோதனை வெற்றி

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> அக்னி -1 ஏவுகணை சோதனை வெற்றி

   (2012-07-13 00:00:00)

அணு ஆயுதங்களை சுமந்துச் செல்லும் அக்னி 1′ ஏவுகணை, வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது.

ஒடிசா கடற்பகுதியில் வீலர் தீவில் உள்ள நான்காவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10 பத்து மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. முற்றிலும் உள்நாட்டு தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, குறிபார்த்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் கிலோ வரையிலான எடையை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. இன்று நிகழ்த்தப்பட்ட சோதனையில்போது, இந்த ஏவுகணை தனது இலக்கை குறிபார்த்து மிகச் சரியாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.