தயாநிதி மாறன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்-காங்கிரஸ்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> தயாநிதி மாறன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்-காங்கிரஸ்

   (2012-07-28 00:00:00)

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கியுள்ள மாறன் சகோதரர்கள் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனப் பங்குகளை விற்க தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்றும் இதனால் ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்தார் என்பதும் புகார். ஏர்செல் நிறுவனம், மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாறியவுடன் உடனடியாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இதற்கு கை மாறாக மேக்ஸிஸ் நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் பெருந்தொகையை முதலீடு செய்ததும் மற்றொரு குற்றச்சாட்டு.

இது தொடர்பாக தயாநிதி மாறன் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் சட்டம் தமது கடமையைச் செய்யும். அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்றார்.