பாஸ்போர்ட்டுக்கு போலி ஆவணங்கள்-பாபா ராம்தேவ் உதவியாளர் கைது

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> பாஸ்போர்ட்டுக்கு போலி ஆவணங்கள்-பாபா ராம்தேவ் உதவியாளர் கைது

   (2012-07-21 00:00:00)

டெல்லி: பாஸ்போர்ட் எடுப்பதற்காக போலி கல்வி ஆவணங்களைக் கொடுத்த வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த பாலகிருஷ்ணா, உத்தரப்பிரதேசம் சமஸ்கிருத மகாவித்யாலயாவில் படித்ததாகக் கூறி ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த ஆவணங்கள் போலி எனத் தெரியவந்ததால் அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணாவுக்கு டேரா டூன் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்திருந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணாவை சிபிஐ போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கறுப்புப் பணம் மீட்பு, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக ஆகஸ்ட் 9-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ள ராம்தேவுக்கு இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.