உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்

   (2012-07-28 00:00:00)

லக்னோ:உத்தரபிரதேசத்தில் முன்னாள் முதல்-மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சிலை நேற்றுமுன்தினம் உடைத்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் நஜூமுதீன் சித்திக் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷியை நேற்று சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில்:

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் காட்டாட்சியை தடுத்து நிறுத்தி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையை பராமரிக்கவும் அமைதியான நிலையை கொண்டுவரவும் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யவேண்டும்.

மேலும் மாயாவதி சிலை உடைப்பு பற்றி உயர்மட்டக்குழு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.