சென்னை பெரம்பூர் ரெயில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> சென்னை பெரம்பூர் ரெயில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

   (2012-07-16 00:00:00)

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த ரெயில் தொழிற்சாலையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை இங்கு உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்களில் தீப்பற்றத் தொடங்கியது. இதனால் தீ மளமளவென அந்த குடோன் முழுவதும் பரவியது.

இதனையறிந்த ஊழியர்கள் எரியும் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.