வேலை செய்யாத அதிகாரிகளை நடுரோட்டில் நிறுத்தி சுடவேண்டும்-ஆந்திர மந்திரி

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> வேலை செய்யாத அதிகாரிகளை நடுரோட்டில் நிறுத்தி சுடவேண்டும்-ஆந்திர மந்திரி

   (2012-07-14 00:00:00)

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சிறுபாசன துறை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை நீர்பாசன துறை மந்திரி டி.ஜி. வெங்கடேஷ் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் அரசு அதிகாரிகளை கடுமையாக தாக்கி பேசினார். மந்திரி டி.ஜி. வெங்கடேஷ் பேசியதாவது:-

வேலை செய்யாத அதிகாரிகளை ரோட்டில் நிறுத்தி சுட்டுத்தள்ள வேண்டும். குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைகனம் அதிகம். ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். நாற்காலியை விட்டும் நகர மாட்டார்கள். அமைச்சர்களாகிய நாங்கள் வேகமாக பணியாற்ற நினைத்தாலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் பணிகள் தடைபட்டு நிற்கின்றன. அவர்கள் ஏதோ ஊழல் செய்யாதவர்கள் போலவும், உண்மையானவர்கள் போல போர்டு மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கு வதுகூட தண்டம்தான்.

இவ்வாறு மந்திரி டி.ஜி. வெங்கடேஷ் பேசினார்.