கபடி வீராங்கனை தற்கொலை முயற்சி

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> கபடி வீராங்கனை தற்கொலை முயற்சி

   (2012-07-14 00:00:00)

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பத்மா (24) தேசிய கபடி வீராங்கனை. இவர் அனந்தபுரத்தைச் சேர்ந்த கபடி வீரர் ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களாக பத்மாவுடன் பேசுவதை ரமேஷ் நிறுத்திக் கொண்டார். இதனால் பத்மா காதலனை தேடி அனந்தபுரம் வந்தார்.

இதையறிந்த ரமேஷ் பத்மா சந்திப்பை தவிர்க்க குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ரமேசுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டதாக அறிந்தார்.

இதையடுத்து காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பத்மாவை சமாதானப்படுத்தி இரவு ஒரு வீட்டில் தங்க ஏற்பாடு செய்தனர். அங்கு தங்கிய பத்மா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்றார். ஆபத்தான நிலையில் அவர் இந்துபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 2005-ம் ஆண்டு பத்மாவின் தந்தை இறந்து விட்டார். தாய் லட்சுமி அம்மாள் பள்ளிக்கூட விடுதியில் வேலை பார்த்து வருகிறார்.