நித்தியானந்தாவுக்கு ரூ. 10 கோடி தரத் தேவையில்லை கேஸ் டிஸ்மிஸ்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> நித்தியானந்தாவுக்கு ரூ. 10 கோடி தரத் தேவையில்லை கேஸ் டிஸ்மிஸ்

   (2012-07-09 00:00:00)

பெங்களூர்: கர்நாடக அரசு தனக்கு ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து விட்டது.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்குள் சமீபத்தில் பெங்களூர் போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் ஆசிரமத்தை இழுத்து மூடி சீலும் வைத்தனர். இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தரப்பு ஒரு கேஸ் போட்டது.

இதுதொடர்பாக நித்தியானந்தா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரவி நாயக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் சோதனை என்ற பெயரில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி விட்டனர். இதற்காக கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா, ராம்நகர் மாவட்ட உதவி கமிஷனர் மற்றும் செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஆகியவை ரூ 10 கோடி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த மனுவை இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. அதுதான் ஆசிரமத்தை சீல் வைக்காமல் நித்தியானந்தாவிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்களே, பிறகு எதற்கு நஷ்ட ஈடு என்று நீதிபதி தனது உத்தரவின்போது கூறினார்.