காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 16 பேர் விபத்தில் பலி

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 16 பேர் விபத்தில் பலி

   (2012-07-27 00:00:00)

ஸ்ரீநகர்:இமயமலையில் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க தற்போது பகதர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் அமர்நாத் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் ஒரு டிரக்கில் (லாரியில்) நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர். அதில் 34 பயணிகள் இருந்தனர்.

ஜம்முவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பா மாவட்டத்தில் ஷமூர்ஹா மோர்க் என்ற இடத்தில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் உள்ள பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராணுவம், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர்.

இந்த விபத்தில் அதே இடத்தில் 9 பேர் இறந்தனர். மெலும் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து விபத்தில் பலியானாவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இவர்கள் தவிர 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனவே சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர்.

இது இந்த மாதம் அமர்நாத் யாத்திரையின் போது நடந்த 2-வது விபத்தாகும். கடந்த 14-ந்தேதி அமர்நாத் யாத்திரை சென்று திரும்பியபோது ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பான் என்ற இடத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. அதில் 15 பேர் உயிரிழந்தனர்.