நித்யானந்தா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்!

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> நித்யானந்தா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்!

   (2012-06-13 00:00:00)

பெங்களூரு; கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா இன்று அம்மாநிலத்தில் உள்ள ராம்நகரா மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தன் மீதான வழக்குகளை வாபஸ் பெற பெங்களூரு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவர் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.

முன்னதாக பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கைகலப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக நித்யானந்தா மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் பிடிவாரண்டு பிறப்பித்தனர்.

இதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.அவரை கைது செய்ய தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்தனர்.

இந்நிலையில்,நித்யானந்தா மீதான வழக்கை ரத்து செய்யுமாறு நித்யானந்தா தரப்பில் கோரிக்கை மனு ஒன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததோடு, இம்மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து யாரும் எதிர் பாராதவகையில், நிதியானந்தா கர்நாட்க மாநிலத்தில் உள்ள ராம் நகரா மாவட்ட நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

ஒரு நாள் காவல்

அவரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.