விளையாட்டு வீரர்களுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்-நித்தியலட்சுமி முதலிடம்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> விளையாட்டு வீரர்களுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்-நித்தியலட்சுமி முதலிடம்

   (2012-07-09 00:00:00)

சென்னை:பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

விளையாட்டு பிரிவு இடங்கள் 100-ல் இருந்து 500 ஆக உயர்த்தி முதல்- அமைச்சர் உத்தரவிட்டார். இதனால் 5-ந்தேதி நடைபெற வேண்டிய கலந்தாய்வு தள்ளிப்போனது. இன்றும் (9-ந்தேதி) நாளையும் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழக விக்டோரியா அரங்கத்தில் நடக்கிறது.

விளையாட்டு வீரர்கள் 3505 பேரில் விண்ணப்பித்ததில் 13 பேரின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டு 3492 விண்ணப்பங்கள் தகுதியானது. இதில் 2330 மாணவர்களும் 1162 மாணவிகளும், ஆவர். அவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

இன்று 560 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். நாளை 474 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான கட்-ஆப் மார்க்கில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ரமேஷ்சந்த் மீனா சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். இதில் முதலிடம் பிடித்த மாணவி நித்தியலட்சுமியை அவர் பாராட்டினார்.