ஜெயலலிதா திருந்தாவிட்டால் மீண்டும் போராட்டம்-மு.க.ஸ்டாலின்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> ஜெயலலிதா திருந்தாவிட்டால் மீண்டும் போராட்டம்-மு.க.ஸ்டாலின்

   (2012-07-05 00:00:00)

சென்னை : ''அதிமுக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா திருந்தவில்லை என்றால் இதுபோன்ற போராட்டம் மீண்டும் நடத்தப்படும்'' என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் பகுதியில் மு.க. ஸ்டாலின் தலைமை யில் மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதுவே எங்களுக்கு பெரிய வெற்றியை தேடி தந்துவிட்டது. அதற்காக காவல் துறை யினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திமுக தலைவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களின் எதிர்பார்ப்பை மீறி, போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கைதாகியுள்ள எங்கள் மீது இந்த அரசு எத்தனை பிரிவுகளில் வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் யாரும் ஜாமீன் கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை அறிவிப்புக்கு பின் மண்டபத்திலிருந்து மாலை 6 மணியளவில் மு.க. ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவினரை கைது செய்து, ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் சேலம், புழல், வேலூர் சிறையில் அடைப்போம் என்று பயமுறுத்தினார்கள். சிறைக்கு அஞ்சாதவர்கள் திமுகவினர். போலீஸ் கணக்குப்படி கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரம். எங்கள் கணக்கின்படி 2 லட்சம் பேர் கைதானார்கள்.

அவ்வளவு பேரையும் அடைக்க சிறைச்சாலைகளில் இடமில்லை. வேறு வழியில்லாமல் விடுதலை செய்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றி. இதில் கலந்து கொண்ட திமுகவினர் அனைவருக் கும் நன்றி. இதற்கு மேலும் ஜெயலலிதா திருந்தாவிட்டால் மீண்டும் இதுபோன்ற போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.