ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் விமானிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் விமானிகள் இடையே நேற்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் 58 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த 3ஆம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, தொழிலாளர் நல ஆணையர் முன்பு நேற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை பரிசீலிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறியதாகவும், இதனால், 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் விமானிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என விமானிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.