தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம்-அமலுக்கு வந்தது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம்-அமலுக்கு வந்தது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

   (2012-07-10 00:00:00)

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறை இன்று காலை 10 மணி முதல் அமலுக்கு வந்தது. பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், முறைகேடுகளை தடுப்பதற்காகவும் தட்கல் முன்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்ய முடியாது. பகல் 12 மணி முதல்தான் தட்கல் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தட்கல் முன்பதிவுக்கு தனி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் டிக்கெட் எடுக்க வருபவர்களை கண்காணிக்க ரகசிய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கவுன்ட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் அவசரமாக பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் முன்பதிவில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்காக பயணம் செய்வதற்கு ஒருநாள் முன்னதாக தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. முன்பதிவில் பலர் முறைகேடாக டிக்கெட் பெற்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று விடுவதாக புகார் வந்ததை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.