பாதாள அறையில் பொக்கிஷம் 18 அடி தங்கச் சங்கிலி மற்றும் 50 கிலோ தங்க அங்கியும் கண்டெடுப்பு

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> பாதாள அறையில் பொக்கிஷம் 18 அடி தங்கச் சங்கிலி மற்றும் 50 கிலோ தங்க அங்கியும் கண்டெடுப்பு

   (2012-07-05 00:00:00)

பத்மநாதபுரம்: திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ள கடைசி பாதாள அறையும் திறக்கப்பட்டுள்ளது. நான்கு கதவுகளைக் கொண்ட அறையில் ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளதாக நகை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார். தற்பொழுது 18 அடி தங்கச் சங்கிலி மற்றும் 50 கிலோ எடை கொண்ட தங்க அங்கியும் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இந்த அறையில் உள்ள ஐந்து மாதங்கள் வரை ஆகும் என்றும் வேலாயுதன் தெரிவித்துள்ளார்.நகைகளை மதிப்பிட ஜெர்மனியிலிருந்து கருவிகள் கொண்டு வரப் பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.