விஜயகாந்த் ஒரு காமெடி பீஸ்-வில்லன் ஆனந்தராஜ்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> விஜயகாந்த் ஒரு காமெடி பீஸ்-வில்லன் ஆனந்தராஜ்

   (2012-07-09 00:00:00)

ஆரணி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது கட்சியும் ஒரு காமெடி பீஸ் என்று பேசியுள்ளார் வில்லன் நடிகரும், அதிமுக காரருமான ஆனந்தராஜ்.

ஆரணியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆனந்தராஜ். இதற்காக ஆரணிக்கு வந்திருந்த ஆனந்தராஜ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இது வரை 14 ஜனாதிபதி தேர்வுகள் நடத்துள்ளது. ஆனால், இது வரையிலும் இல்லாத குழப்பங்கள் நிறைந்த ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் வேட்பாளர் சங்மா கன்டிப்பாக வெற்றி பெறுவார்.

புதுகோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. டெபாசிட் பெற்றது என்பது தவறு. தி.மு.க.வினர் மாறி ஓட்டுபோட்டு இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்கள். இந்த ஓட்டு வங்கியை வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் அதிக இடம் கேட்க முடியுமா?

விஜயகாந்த் ஒரு முதிர்வற்ற அரசியலை நடத்தி வருகிறார். என்னை பொறுத்தவரை அவரும், அவர் கட்சியும் காமெடி பீஸ்தான் என்று கூறி சிரித்தார் ஆனந்தராஜ்.