எந்த சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டோம்: கருணாநிதி

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> எந்த சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டோம்: கருணாநிதி

   (2012-07-04 00:00:00)

திமுகவினர் இன்று நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் மிக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட திமுகவினரை எந்த மாநிலச் சிறையில் அடைத்தாலும் அதற்கு அவர்கள் பயப்பட மாட்டார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக சார்பில் இன்று நடந்த சிறை நிரப்பும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கருணாநிதியை சந்தித்துக் கேட்டனர். இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது என்றார் கருணாநிதி.

திமுகவினரை வெளி மாநில சிறைகளில் அடைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு திமுகவினர் எதற்கும் அஞ்சாதவர்கள். அதிமுக அரசின் மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டார்கள். எந்த மாநில சிறையில் அடைத்தாலும் பயப்பட மாட்டார்கள் என்றார்.

இந்தப் போராட்டத்தால் அதிமுக திருந்தும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு திருந்தும் என்று நான் நம்பவில்லை, எதிர்பார்க்கவில்லை. அண்ணாவையே கைவிட்டவர்கள் இவர்கள். சர்வதேச அளவில் பலரும் பாராட்டிய அண்ணா நூலகத்தை ஆபாசப்படுத்தியவர்கள். எனவே இவர்கள் திருந்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார் கருணாநிதி.