அணு உலைகளை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு முடிவு

 >> Home  >> Tamil Latest  >>  >> world_news News   >> அணு உலைகளை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு முடிவு

   (2012-06-16 00:00:00)

அணு உலைகளை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.


தலைநகர் டோக்யோவில் பிரதமர் Yoshihiko Noda வீட்டின்முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர், அணுசக்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். அணு உலைகளால் ஆபத்து மட்டுமே ஏற்படும் என கவலை தெரிவித்த அவர்கள், மீண்டும் அணுமின்நிலையத்தை இயக்கும் நடவடிக்கை மின்சார நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காகவே உதவும் என்றும் குற்றம்சாட்டினர். தனியார் மின்சார நிறுவனங்களுக்கு சாதகமாக ஜப்பான் அரசு செயல்படக்கூடாது என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த விவகாரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதே புத்திசாலித்தனம் என தெரிவித்தனர். புகுஷிமா அணுமின் நிலைய விபத்தை தொடர்ந்து ஜப்பானில் அணுமின்நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து Ohi அணுமின்நிலையத்தில் உள்ள 2 உலைகளை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.