ஒலிம்பிக் வில்வித்தை-இந்திய ஆண்கள் அணி போட்டியில் இருந்து அவுட்

 >> Home  >> Tamil Latest  >>  >> world_news News   >> ஒலிம்பிக் வில்வித்தை-இந்திய ஆண்கள் அணி போட்டியில் இருந்து அவுட்

   (2012-07-28 00:00:00)

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில், அணிகளுக்கான போட்டியில் கடைசி இடத்தை (12 வது) பெற்ற இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. ஆனால் தனி நபர் போட்டிகளில் 3 இந்திய வீரர்களுக்கு இன்னும் வாய்ப்பு நீடிக்கிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று வில்வித்தை போட்டிகள் துவங்கியது. இதில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில், இந்திய அணியின் சார்பாக தரூண்தீப் ராய், ராகுல் பார்னஜி, ஜெயந்தா தாலுக்தார் ஆகிய 3 பேர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற அணிகளுக்கான போட்டியில் இந்தியா அணி 1969 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்தது. இதனையடுத்து அடுத்த சுற்றிற்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பான் அணி உடன் மோதியது. இதில் இரு அணிகளும் 214 புள்ளிகள் பெற்றன. ஆனால் ஜப்பான் அணி 29-27 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதனால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் தனி நபர் போட்டிகளில் இந்தியாவின் 3 வீரர்களும் அடுத்த சுற்றில் விளையாட வாய்ப்புள்ளது.